தெலுங்கானாவில் 5 மாத குழந்தையை வீடு புகுந்து தெரு நாய் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள விகாராபாத் மாவட்டத்தில் தந்தூர் கிராமத்தில் தான் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாபுசாய் என்ற 5 மாதக் குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு பெற்றோர் அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது நாய் கடித்து குழந்தை உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், குறித்த குழந்தையைக் கொன்றது தெருநாய் என்று அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளமை அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.