ஈரானின் சபஹர் துறைமுகம் தொடர்பாக ஈரானுடன் 10 வருட ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சபாஹர் துறைமுகம் என்பது இந்தியாவின் ஈரானின் உதவியுடன் கட்டப்பட்ட துறைமுகமாகும். மத்திய ஆசிய நாடுகளுடன் ஈரான் வர்த்தக ஒப்பந்தங்களை அதிகரிக்க இந்த துறைமுகம் உதவும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா ஈரான் இடையே நெருக்கடி
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நெருக்கடி நிலவி வருகிறது, ஈரானின் அணுசக்தி திட்டத்தால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும், ஈரானுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு மற்ற நாடுகளை அமெரிக்கா மிரட்டி வருகிறது.
சீனாவின் எழுச்சிக்கு மத்தியில் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா, அமெரிக்காவின் நெருங்கிய நண்பன். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே மிக நெருக்கமான மற்றும் வலுவான உறவு உள்ளது.
விளைவுகளை சந்திக்க வேண்டும்
ஈரானுடன் தொடர்பு கொள்ளும் எவரும் அறிந்திருக்க வேண்டும். விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டும். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியாவை மறைமுகமாக மிரட்டியுள்ளது.