இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் சிகரெட் விற்பனையானது கடந்த ஆண்டை விட குறைவடைந்துள்ளதாக இலங்கை புகையிலை உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரி அதிகரிப்பு, மக்களின் வருமானம் வீழ்ச்சி மற்றும் பொருளாதார நெருக்கடிகளே இதற்கு காரணம் என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை சிகரெட் விற்பனை வருமானம் 46.93 பில்லியன் ரூபாவில் இருந்து 45.85 பில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று சிகரெட்டுக்கான வரி அதிகரிப்பு காரணமாக சிகரெட் பாவனையாளர்களில் அதிகமானோர் பீடி பாவனைக்கு பழகி வருவதாக கூறப்படுகின்றது.