பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் இருந்தால், சர்க்கரை நோய் வரும் அபாயம் இருக்கும். உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், உங்கள் உணவில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.
சர்க்கரை நோய் வருவதற்கு முன்னர் உணவு குறித்து அக்கறை செலுத்தாத பலரும் நீரிழிவு நோய் வந்ததன் பின்னர் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.
ஆனால் குறிப்பிட்ட சில பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் ஆரம்பத்தில் இருந்தே ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சுகரை கட்டுப்படுத்தும் வழிகள்
வழக்கமாகவே சரியான உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் இன்சுலின் சுரக்கும் திறனை மேம்படுத்த பெரிதும் துணைப்பரிகின்றது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது 30 முதல் 45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சிகள் செய்வதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிவதுடன் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தையும் குறைத்துக்கொள்ள முடியும்.
இதற்க கடுடையான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், நடனம் போன்ற மிதமான உடற்பயிற்சிகளை செய்தாலே சர்க்கரை அளவை சீராக பேண முடியும்.
ஏரோபிக் உடற்பயிற்சி செய்வது கூடுதல் பலனைத் தரும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.இத மட்டுமன்றி வாரத்தில் 2 – 3 முறை பளு தூக்குதல், புஷ்-அப் போன்ற உடற்பயிசிகளை மேற்கொள்வதும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
அது மட்டுமன்றி பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்களை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட ஹார்போஹைட்ரேட் உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்புகள் அடங்கிய உணவுகளை முற்றிலும் தவிர்பது சிறந்த பலனை கொடுக்கும்.
இவ்வாறான விடயங்களை கடைப்பிடிப்பதுடன் ஆரோக்கியமானதும் நீடித்த ஆற்றலை கொடுக்கக்கூடியதுமான உணவுகளை தெரிவு செய்து சாப்பிடுவதனால் ரத்த சர்க்கரை அளவை எப்போதுமே கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.