ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கிறது என ரிவியூ சொல்லி யூட்டியூபில் பாப்புலர் ஆனவர் இர்பான். அவர் சமீபத்தில் தொடங்கிய குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராகவும் வந்திருக்கிறார்.
இர்பான் தற்போது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவரது மனைவி ஆலியா கர்ப்பமாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு மகிழ்ச்சி உடன் அறிவித்து இருந்தனர்.
அதன் பின் துபாயில் குழந்தையில் பாலினம் என்ன என்பதை கண்டறிந்து அதை வெளியிடுவதை விழாவாக செய்தனர். அந்த வீடியோவை இர்பான் வெளியிட்டு இருந்தார்.
நடவடிக்கை
இந்தியாவில் சட்டப்படி குழந்தை பிறக்கும்முன்பு பாலினத்தை கண்டறிவது குற்றம். அதனால் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க தற்போது சுகாதாரத்துறை உத்தரவிட்டு இருக்கிறது. நோட்டீஸ் வந்ததை அடுத்து அந்த வீடியோவையும் தற்போது இர்பான் நீக்கிவிட்டார்.
விசாரணை நடத்த மூன்று பேர் குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் இர்பான் மீது என்ன நடவடிக்கை பாய்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.