கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் தனது சகோதரியின் காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவல் பொலீஸாருக்கு பரிமாறப்பட்டு கிளிநொச்சி பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
14 வயது சிறுமி சகோதரியின் காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படடுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக நிலையில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















