இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு – மாளிகாவத்தையில் வைத்து குறித்த சந்தேநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள்
கடந்த 19ஆம் திகதி இரவு இலங்கையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இண்டிகோ எயார்லைன்ஸ் விமானத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் நால்வரும் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களே இந்த பயங்கரவாதிகளின் இலக்கு என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.