சாப்பி்ட்ட பின்னர் ஓமம் அல்லது பெருங்காய தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெருங்காயம் மற்றும் ஓமம் நீர்
பெருங்காயம் அல்லது ஓம நீரை குடிக்கும் போது நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள கொழுப்பை கரைக்க இது உதவுகிறது. இதனால் உடலுக்கு தேவையானவற்றை வழங்கி, தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
எனவே சாப்பிட்டவுடன், பெருங்காயம் மற்றும் ஓமம் ஊறவைத்த தண்ணீரை பருகுவது உங்கள் உடலில் வளர்சிதையை அதிகரிக்கும். உடல் எடையை முறையாக பராமரிக்க உதவும்.
இதன் காரணமாக குடல் செயற்பாடு சீராக அமைந்து உடலின் செரிமானத்தை சீராக்க உதவுகிறது. இது வயிறு உப்புசம், செரிமானமின்மை, வாயுத்தொல்லை என அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது.
செரிமான எண்சைம்களை தூண்டி, செரிமான ஆரோக்கியத்தை பாதுகாத்து, குடலை நன்றாக வைத்துக்கொள்ளும்.
பெருங்காயம் மற்றும் ஓமத்தில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் மூக்கு மற்றும் நெஞ்சில் ஏற்படும் அடைப்பை சரிசெய்கிறது.
வீக்கத்தை குறைக்கிறது. சுவாசத்தை சரிசெய்கிறது. சுவாசம் தொடர்பான ஆஸ்துமா, இருமல் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
இதை தவிர வயிறு அசவுகர்யங்களைப் போக்குகிறது மற்றும் சாப்பிட்டவுடன் ஏற்படும் வயிறு உப்புசத்தை போக்குகிறது.
நாம் அன்றாடம் குடிக்கும் நீரை விட அதாவது சாதாரண நீரை விட ஓமம் மற்றும் பெருங்காய நீரில் அதிகப்படியான நன்மைகள் இருக்கின்றன.