முல்லைத்தீவுவில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சந்தேகத்தில் கடை உரிமையாளர் ஒருவரை நேற்றையதினம்(28) முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி நாள்தோறும் குறித்த கடைக்கு சென்று வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மருத்துவமனையில் தெரியவந்த உண்மை
இந் நிலையில் உடல் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிவயந்துள்ளது.
இந்த நிலையில் சிறுமியின் சட்டவைத்திய விசாரணையினை தொடர்ந்து கடைக்காரர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.