கொழும்பு (Colombo) – கண்டி (Kandy) பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (3) அதிகாலை இடம்பெற்றதாக நிட்டம்புவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
குறித்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது பயணித்த எவருக்கோ காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.