இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 26% ஆக அதிகரித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் வருமானம் இல்லாத மற்றும் கல்வி வசதிகள் இல்லாத ஒரு பகுதி இருப்பதாகவும் அதனை 2032 ஆம் ஆண்டளவில் 10% ஆகக் குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.
அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமை
எனவே, இந்த திட்டத்தை தொடர வேண்டும். இந்தப் பரவலான ஏழ்மைக்கு தீர்வு காணும் வகையில்தான் வாரிசுரிமையில்லா நில உரிமை வழங்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
மேலும், கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு அந்த சொத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் புதிதாக சிந்திக்க வேண்டும் என்றார்.