முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில், கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (02-06-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிவனு சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.