இலங்கைக்கும் (Sri Lanka) மாலைத்தீவிற்குமான (Maldives) பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக இருநாடுகளும் இனைந்து இணைந்து புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக, கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardana) மற்றும் மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் மூசா சமீர் (Moosa Zameer) நேற்று (6) கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராய்வது குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலைத்தீவு மாணவர்கள்
இலங்கையுடனான உறவுகளை விரிவுபடுத்துவதற்கு தமது நாடு மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், இருதரப்பு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாலைதீவுக்கும் இலங்கைக்குமான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் அமைச்சர் சமீர் கூறியுள்ளார்.
மேலும், மாலைத்தீவில் பணிபுரியும் இலங்கையர்களின் பணம் அனுப்பும் முறையை இலகுப்படுத்துவது மற்றும், இலங்கையில் பணம் செலுத்தும் மாலைத்தீவு மாணவர்கள் மற்றும் மருத்துவ சுற்றுலாப்பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்த ஒப்பந்தம் செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.