பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா(Shavendra Silva) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த நியமனம் ஜூன் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை செல்லுபடியாகும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகளின் பிரதானி
சிவில் கடமைகளில் இருந்து விலகியதன் பின்னர் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக அவர் கடந்த 20.05.2024 ஆம் திகதி அரசாங்கத்திகனால் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.