இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு ஒக்டோபர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இன்றையதினம் (14-06-2024) அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு தொடர்பில் நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் பெர்னாண்டோ, எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என உறுதியளித்துள்ளார்.