தன்னை திருமணம் செய்ய மறுத்த கொழும்பு பிரபல வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்த யுவதியை, மோசமாக சித்தரிக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விற்பனை உதவியாளராக பணியாற்றிய 19 வயதான யுவதியின் புகைப்படங்களை, மற்றியமைத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த, அதே நிறுவனத்தை சேர்ந்த 36 வயதானவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் செய்ய மறுத்த யுவதி
திருமணம் செய்யுமாறு குறித்த நபர் விடுத்த கோரிக்கையை மறுத்தமையினால் இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை நிறுவனத்தின் மற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
சந்தேக நபரின் இழிவான செயலை சம்பந்தப்பட்ட வர்த்தக காட்சியறையின் பிரதான நிர்வாக அதிகாரிகளும் அறிந்திருந்ததாகபொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.



















