பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவே கூடாத பழங்கள் எவை என இந்த பதிவில் பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய பழங்கள்
நீரிழிவு நோயாளிகள் எல்லா பழங்களையும் சாப்பிடலாம். ஆனால் அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களாக இருக்கும்பட்சத்தில் அதனை தவிக்க வேண்டியது அவசியம்.
நீரிழிவு நோய் ஆரம்ப நிலையில் இருக்கும் பட்சத்தில் தினசரி உணவில் 150 கிராம் முதல் 200 கிராம் வரை பழங்களை சேர்த்துக்கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தை ஏற்படுத்தக்கூடும்.ஆனால், அதை எந்த அளவில் உட்கொள்கிறோம் என்பதில் கவனம் தேவை. உங்களுக்கு சர்க்கரை அளவு ஏற்கெனவே அதிகமாக இருந்தால் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடவே கூடாது. இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், இதில் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இந்தப் பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அதில் அதிகப்படியான கிளைசெமிக் குறியீடு உள்ளதால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
ஃப்ரீ டயாபட்டிக் நோயாளிகள் வாழைப்பழத்தை தவிர்த்தால் அது அடுத்த கட்டத்துக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு வாழைப்பழம் சாப்பிட ஆசையாக இருந்தால் ஓரளவுக்கு காயாக இருக்கும் வாழைப்பழங்களை எடுத்துக் கொள்வது சிறந்தது.
முலாம்பழம் சாப்பிடுவதையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
இது தவிர கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள திராட்சை பழத்தில் அதிக அளவு பிரக்டோஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடக்கூடாது.
இதில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி இருந்தாலும், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் கொஞ்சம் சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
அதிக அளவு சர்க்கரை இல்லாத பழங்களை நீரழிவு நோயாளிகள் எடுத்து கொள்ளலாம். இது சர்க்கரை அளவை பாதிக்காது. சர்க்கரை இல்லாத பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் முழு பழங்களையும் உட்கொள்வது ரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் துணைப்புரியும்.