சட்டவிரோதமான முறையில் 18 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த 06 இலங்கையர்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தங்களுடைய ஆசனவாய் மற்றும் பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த தங்கத்தின் எடை 08 கிலோ 6325 கிராம் ஆகும்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கல்முனை, மூதூர் கொழும்பு, கல்கெடிஹேன மற்றும் மினுவாங்கொடை ஆகிய இடங்களை வசிப்பவர்கள் என்பதுடன் அவர்கள் டுபாயில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு தீவு வந்துள்ளனர்.



















