சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, நேற்றைய தினம் (01) இயற்கை எரிவாயுவின் விலை 2.598 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதேவேளை, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
எரிவாயுவின் விலையில் திருத்தம்
இதன்படி WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.75 அமெரிக்க டொலராகவும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.19 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய லிட்ரோ (litro gas) சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் (muditha peiris) தெரிவித்துள்ளார்.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (02) வெளியாகும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.