முல்லைத்தீவு (Mullaitivu) பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வாள்வெட்டு சம்பவமானது இன்று (2) அதிகாலை மாந்தை கிழக்கு – பாலிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இருவர் படுகாயம்
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பாலிநகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வாள்களுடன் இரண்டு வீடுகளுக்கு சென்ற குழுவினர் குறித்த வீட்டில் இருந்த இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, வாள்வெட்டில் படுகாயமடைந்த இருவரும் மல்லாவி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் மல்லாவி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.