இந்தியாவில் நகரம் முதல் தெருக்கோடிவரை கிடைக்கும் உணவு பானி பூரி ஆகும். பல மக்களும் விரும்பி உண்ணும் உணவில் பானி பூரியும் ஒன்றாகும். பாணிப்பூரியை ரசித்து உண்ணும் மக்கள் ஏராளம்.
இந்நிலையில் கர்நாடகாவில், பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள்
அங்குள்ள 250 பானி பூரி மாதிரிகள் பெறப்பட்டு நடாத்திய பரிசோதனையில் 40 மாதிரிகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில் நீலம், Tartrazine போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பானிபூரியில் புற்றுநோய் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.
அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் உடல் நலனில் தனி அக்கறை எடுத்து உடல் நலத்தை பாதிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பானிபூரியை தடை செய்யவும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பலர் விரும்பி உண்ணும் பிரபலமான வட இந்திய உணவான பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பானிபூரியை விரும்பி உண்ணும் நபர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அதேவேளை கடந்த மாதம் புற்றுநோயை உண்டாக்குவதாக கண்டறியப்பட்டதை அடுத்து பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், கபாப் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.