பழங்கள் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது ஆப்பிள்தான். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டாமென்று கூறுவார்கள்.
ஆப்பிள் ஊட்டச்சத்து நிறைந்த பழமாக மட்டும் இல்லாமல், இது கிட்டத்தட்ட ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கும் பழமாகும். பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் ஆப்பிளின் நன்மைகள் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருப்போம்.
இது மட்டுமின்றி, 1 அல்லது 2 ஆப்பிளை தொடர்ந்து சாப்பிடுவதால், நம்முடைய பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது. ஆப்பிளை சாப்பிட்ட உடனேயே சில பொருட்களை சாப்பிடுவது உங்களுக்கு நன்மைகளுக்குப் பதிலாக கெடுதலையே ஏற்படுத்தும். இந்த பதிவில் ஆப்பிள் சாப்பிட்டவுடன் சாப்பிடக்கூடாத பொருட்கள் என்னென்ன என்று நாம் இங்கு பார்ப்போம்.
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக்கூடாது
பாலுடன் தயிர் சாப்பிடக்கூடாது என்று எப்படி அறிவுறுத்தப்படுகிறதோ, அதே போல் ஆப்பிளை சாப்பிட்ட உடனேயோ அல்லது சுமார் 2 மணி நேரத்திற்குள்ளோ தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனென்றால், ஆப்பிள் மற்றும் தயிர் இரண்டின் விளைவும் குளிர்ச்சியாகக் கருதப்படுகிறது, இது ஒன்றாக உட்கொண்டால், சளி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
புளிப்பான பொருட்கள்
நீங்கள் ஆப்பிள் சாப்பிட்டிருந்தால், அதன் பிறகு புளிப்பு பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக ஊறுகாய் அல்லது எலுமிச்சை உட்கொள்ளல் உங்களுக்கு வாயு, அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே ஆப்பிள் சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் புளிப்பான உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
தண்ணீர் குடிக்கக் கூடாது
பொதுவாக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதாகவும், பாதிப்பில்லாததாகவும் கருத்தப்பட்டாலும் குறிப்பிட்ட நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக சிட்ரஸ் பழங்கள் அல்லது இனிப்புப் பழங்களை உட்கொண்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. இது உங்கள் pH அளவில் தாக்கம் மற்றும் அஜீரணம், மலச்சிக்கல், வயிற்று பாக்டீரியா மற்றும் வாயுக்கோளாறை ஏற்படுத்துகிறது.
மேலும் ஆப்பிள் அல்லது ப்ரெக்டொஸ் உள்ள ஏதேனும் ஒரு பொருளை உட்கொண்ட பிறகு, தண்ணீரைக் குடிப்பதன் மூலம் வயிற்று அமிலத்தை நீர்த்துப்போகச் செய்கிறது மற்றும் ஈஸ்ட் உயிர்வாழ்வதற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது, இதனால் வயிற்றில் வாயு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.
முள்ளங்கி
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு முள்ளங்கி சாப்பிட்டால் சரும பிரச்சனைகள் வரலாம், அது சருமத்தில் சொறி அல்லது அலர்ஜியை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இதற்கு மேலும் சான்றுகள் தேவைப்படுகிறது