யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக தென்மராட்சி மக்களால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் கடை அடைப்பு நடவடிக்கையும் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடை அடைப்பு
அதேவேளை, பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா சுகயீன விடுமுறையில் இருப்பதாகவும் இன்று வைத்தியசாலைக்கு சேவைக்கு செல்ல போவதில்லை எனவும் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் அணிதிரண்டு அமைதியான வழியில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது