புத்தளம்(puttalam) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை(Ali Sabri Rahim) உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான அயோனா விமலரத்ன, கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.
கற்பிட்டி காவல்துறை பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாம்பிட்டியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினரை எதிரியாக குறிப்பிட்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை
இதற்கு முன்னரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய பகிரங்க பிடியாணை | Public Warrant For Arrest Of Member Of Parliament
அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி காவல்துறையினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசி
இதேவேளை கடந்த வருடம் அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை வெளிநாடொன்றிலிருந்து கொண்டுவந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















