ஊழல் செய்யும் மருத்துவர்களுக்கு எதிராக அறம் காத்து சேவை செய்யும் யாழ். அர்ச்சுனாவிற்காக வெளியிட்டுள்ள நெடிசன்களின் கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மருத்துவ பணியை இறைப்பணியாக செய்யும் மருத்துவர்கள் இன்று குறைந்து வரும் நிலையில் அர்ச்சுனா போன்ற ஒரு சிலரையும் ஊழல் செய்யும் மருத்துவர்கள், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வெளியேற்ற முற்படுவதாக கூறி வரும் நெடிசன்களின் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
நெடிசன்களின் கருத்துக்கு இவ்வாறு ஒருவர் பதில் அளித்துள்ளார்.
ஏழை எளிய மக்கள், இந்த ஊழல் நிறைந்த, பயங்கரமான படுபாதகமான சூழலில் வாழ்கிறார்கள்.
இந்நிலையில் இவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான சேவைகள் எப்படி இவர்களுக்குக் கிடைக்கும்.
தங்களைப்போன்ற ஒருவர் எப்போதாவது தான் இவர்களுக்கு உதவும் வகையில் வெளிவருகிறார்கள்.
உலகத் தமிழர்கள், தற்போது உங்களைச் சுற்றி நிற்கிறார்கள். பூமிப்பந்தில் உள்ள தமிழர்கள் தங்களை நோக்கி உன்னிப்பாகக் கவனித்து, ஆதரவளித்துக் கொண்டுள்ளனர்!
இணையம் முழுக்க தங்களுக்கு ஆதரவு. மக்களுக்காக நீங்கள் பணி ஆற்றுங்கள்.
இருக்கவேண்டியவர்கள் இருந்தால், நீங்கள் கூறியவர்கள் அனைவரின் நிலை என்ன என்று எண்ணிப்பார்க்கிறோம். என குறிப்பிட்டுள்ளனர்.