யாழில் முட்கிளுவை மரத்தின் முள்ளு குத்தியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் – காரைநகர் , களபூமி பகுதியை சேர்ந்த வனித்தேற்கரசி பாலசுப்பிரமணியம் (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி மரணம்
மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விறகு பொறுக்குவதற்காக சென்ற போது, முட்கிளுவை மரத்தின் முள்ளு காலில் குத்தியுள்ளது.
இதனையடுத்து ஓரிரு நாட்களில் காலில் வலி ஏற்பட மூளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முள்ளு குத்திய காயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உட்கூற்று பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.