பாணந்துறையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கினிகத்தேனை, தியகல பிரதேசத்தில் வைத்து திடீரென எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கார் இன்று (20) காலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக கினிகத்ஹேன பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் ஐந்து பயணித்துள்ள நிலையில், தீ பரவலை கட்டுப்படுத்த முயன்ற நபரொருவர் காயமடைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ காரணமாக கார் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.