கொழும்பு தடயவியல் மற்றும் நச்சு ஆய்வியல் நிலையத்தில் நடத்தப்படும் பிரேத பரிசோதனையை மாலை 5 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதம நிபுணர் சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்தவர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டவர்களின் பிரேத பரிசோதனைகள் பிற்பகல் 3.00 மணி வரை மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றன.
மரண விசாரணை அதிகாரிகளின் உத்தரவில் பிரேத பரிசோதனை
இதன் காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிலர் வாடகை அடிப்படையில் வாகனங்களுடன் வைத்தியசாலைக்கு வந்து பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் மறுநாள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
மேலும், மரண விசாரணை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனைகள் வாரத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணி வரை நடைபெறுவதுடன் பிரேத பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இதேவேளை,நீதிமன்ற உத்தரவின் பேரில் கொண்டுவரப்பட்ட பிரேத பரிசோதனை பதிவுகள் வாரத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 4.00 மணி வரை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரேத பரிசோதனையை மாலை 5 மணி வரை நடத்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி தெரிவித்துள்ளார்.