மொனராகலை பிரதேச சிறுவர் இல்லத்தில் வசிக்கும் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞனை மொனராகலை பொலிஸார் கடந்த 30 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
சிறுவர் இல்லத்தில் இருந்த 15 வயதான சிறுமி, சிறுவர் இல்லத்துக்கு அருகே உள்ள தோட்டத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 28 வயது இளைஞனுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்
இந்நிலையில் சிறுவர்கள் இல்லத்தில், அச்சிறுமியை கடந்த 26ம் திகதி காணவில்லை. அதனையடுத்து தேடியபோது, முட்புதரில் இளைஞன் ஒருவருடன் இருந்துள்ளார்.
இருவரும் புதருக்குள் இருந்த நிலையில், பிரதேசவாசிகள் அவ்விருவரையும் பிடித்து, பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். சிறுமியுடன் இருந்த சந்தேக நபர் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.