நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம் இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்படுவது ஏன் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்யாத காரணத்தினால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை
குறித்த நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தியதன் பின்னர் எரிபொருள் விலை இன்று திருத்தப்படாது என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.