நீர்கொழும்பில் (Negombo) உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் ஆறாம் தரம் படிக்கும் மாணவியை பாடசாலை அதிபர் தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் நீர்கொழும்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதேவேளை, இதற்கு முன்னரும் பல தடவைகள் அதிபரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக மாணவி பெற்றோரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
அத்துடன், இவ்வாறு தவறான முறைக்குட்படுத்தப்பட்ட மேலும் பல மாணவர்கள் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவங்கள் தொடர்பில் நீர் கொழும்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.