ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இன்றைய தினம் (05) இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.