இலங்கையில் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடபெறவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் முதல் பிரசாரக் கூட்டம் இன்று (21) நடைபெறவுள்ளது.
அநுராதபுரம் கடப்பனஹ பகுதியில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பேரணியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெளி மாகாண ஆட்களை அழைத்து வர வேண்டாம்
பெரமுனவின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தாலும் மக்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் எனவும், அடிமட்டத்தில் உள்ள அனைவரும் மீண்டும் பொஹட்டுவவில் இணைந்துள்ளதாகவும் நாமல் தெரிவித்தார்.
கடப்பனஹ மைதானத்தில் நடைபெறும் பேரணிக்கு வெளி மாகாணங்களில் இருந்து ஆட்களை அழைத்து வர வேண்டாம் என கட்சி அமைப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் பிற கட்சியினர் வெளியூர்களில் இருந்து ஆட்களை பஸ்களில் அழைத்து வந்து கூட்டத்தை காட்டினாலும் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம் என தெரிவித்த நாமல், பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.