வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சரியான நேரத்துக்கு சிகிச்சை அளிக்காதால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
குறித்த சம்பவம் நேற்றிரவு (20.08.2024) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிசுவின் தாயார் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்ட போதிலும் அவர்கள் அசமந்த போக்குடன் செயற்பட்டதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த பெண்ணுக்கு சரியான நேரத்தில் மருத்துவம் செய்திருந்தால் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.