யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (28-08-2024) உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கைதடி வடக்கு – கைதடியைச் சேர்ந்த 42 வயதான இராசையா தர்மசேனன் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காணி ஒன்றைத் துப்புரவு செய்தபோது விஷ ஜந்து ஒன்று அவரைத் தீண்டியதாகச் கூறப்படுகின்றது.
இதனையடுத்து அவரை யாழ் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.