இந்தியா – ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் மாணவிகளின் விடுதி குளியலறையில் இரகசிய கெமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கெமராவில் மாணவிகளின் காணொளி இரகசியமான முறையில் பதிவாகி இருந்ததாகவும், குறித்த காணொளிகள் சில மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்ததுடன், தங்களுக்கு நீதி வேண்டும் எனக் கோஷமிட்டனர்.
இதனையடுத்து ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.