அநுராதபுரம் – இப்பலோகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
522 காலாட்படை படைத் தலைமையகத்தில் பணியாற்றிய யாழில் வசித்து வந்த 31 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கெக்கிராவை பகுதியில் இருந்து எப்பாவல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் ஓரத்தில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதேவேளை விபத்தில் காயமடைந்த இராணுவ வீரரை பிரதேசவாசிகள் மருத்துவமனைக்குகொண்டு செல்ல நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் வழியிலேயே அவர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.