வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயதிருவிழாவில் மாநகர சபையின் மனிதாபிமானமற்ற செயல்பாடு தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வெளி வீதியில் கற்பூரம் வியாபாரம் செய்த வயது முதிர்ந்த தாய் ஒருவரின் கற்பூரங்களையே யாழ்ப்பாணம் மாநகர சபை பறிமுதல் செய்துள்ளது.
கண்ணீர்விடும் மூதாட்டி
இந்நிலையில் தனது வாழ்வாதரத்திற்காக கற்பூரம் விற்ற குறித்த தாய் இன்று அதிகாலை முதல் யாழ். மாநகர சபையின் உற்சவகால பணிமனையில் அழுதுகொண்டு இருக்கின்றார்.
வயது முதிர்ந்தவர்கள் பெரிய வீடுகளை கட்டுவதற்காக மற்றும் சொத்துக்களை சேர்ப்பதற்காகவும் சிறு சிறு வியாபாரங்களை மேற்கொள்வதில்லை அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை கொன்று நடத்திச் செல்வதற்காகவே அவர்கள் கோவில் திருவிழா காலங்களில் கற்பூரங்களை விற்கின்றனர் .
மனிதாபிமானம் இல்லாமல் யாழ்ப்பாணம் மாநகர சபை செயற்படுகின்றதாகவும் சமூக ஆர்வலர்கள் , குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேவேளை நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழா நேற்று இடம்பெற்றதுடன் , இன்றைய தினம் தீர்த்த திருவிழா இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது