ஜனாதிபதி்த் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார கூட்டம் மல்லாவியில் நேற்று (31) இடம்பெற்றுள்ளது
நேற்று பிற்பகல் மல்லாவியில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் , சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் யாழ் மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முன்னாள் போராளிகள், மல்லாவி வர்த்தக சங்க பிரதிநிதிகள், தாயக செயலணி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




















