கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, குளக்கரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் 2,613 லீட்டர் கோடாவும், 24 லீட்டர் கசிப்பும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.