ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் போது ஏதேனும் சம்பவங்கள் பதிவாகினால் அது தொடர்பில் உதவித் தேர்தல் அதிகாரி அல்லது மாவட்டச் செயலாளருக்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் நேற்று முதல் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.