எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாதவர்கள் இலகுவாக வாக்களிக்கும் வகையில் புதிய திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி அந்த மக்களுக்கு தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை வழங்கவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த தற்காலிக வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையைப் பெற, வாக்காளர்கள் தங்கள் கிராமசேவகர் அல்லது தோட்டக் கண்காணிப்பாளர் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.