ஆப்பிள் நிறுவனம் தமது புதிய படைப்பான ஐபோன் 16 சீரிஸை நேற்றையதினம் (09-09-2024) வெளியிடவுள்ளது.
இதன்படி, ‘it’s Glowtime’ என்ற நிகழ்வின் மூலம் புதிய தொலைபேசிகள் மற்றும் ஆப்பிள் கைக்கடிகாரம் உள்ளிட்ட பலவற்றை குறித்த நிறுவனம் வெளியிடவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மெக்ஸ் ஆகிய 4 மாடல்களை நேற்று ஆப்பிள் நிறுவனம் வெளியிடப்படவுள்ளது.
இதற்கமைய குறித்த ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளில் பெரிய திரை கொண்ட கமரா மற்றும் பெரிய திரை கொடுக்கப்படவிருக்கிறது.
கமராவின் செயற்பாட்டிற்காகப் பட்டனுடன் (Button), புதிதாகக் கெப்சர் பட்டன் (Capture Button) ஒன்றையும் ஆப்பிள் நிறுவனம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஐபோன் 16 மாடல்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாக அதன் புதிய ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சம் இடம்பெறவிருக்கின்றது.
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்பது ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான AI அம்சமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.