கொழும்பு – இரத்மலானையில் மகனைக் கொன்றுவிட்டு தனது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய கணவன் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் மாளிகாவ பகுதியில் நேற்றைய தினம் (11-09-2024) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மகனைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றுவிட்டு, தனது மனைவியையும் சந்தேக நபர் கொடூரமாகத் தாக்கியமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், மனைவி தற்போது வைத்தியசாலையில், கிச்சைப் பெற்று வருகின்றார்.
இதேவேளை தப்பிச் சென்ற சந்தேக நபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.