ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவாக விநியோகிக்கப்பட்ட தேர்தல் பிரசார அட்டையை பெற மறுத்த வர்த்தகர் ஒருவரை ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் தாக்கியுள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்றைய தினம் (15) நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
கைக்கடிகாரங்களை பழுதுபார்க்கும் விற்பனை நிலையம் ஒன்றிற்குள், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களால் விநியோகிக்கப்பட்ட கையேட்டை விற்பனை நிலையத்தில் இருந்தவர் மறுத்துள்ளார்.
அச்சுறுத்தல்
இந்நிலையில் கோபமடைமந்த, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் குறித்த நபரை தாக்கியுள்ளதுடன் அச்சுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம், வர்த்தக நிலையத்தில் உள்ள சிசிரிவி கமராவில் காணொளியாக பதிவாகியுள்ளது.
மேலும், சம்பவத்தின் போது குறித்த நபர், வர்த்தகரை மிரட்டியுள்ள நிலையில் தனது எதிர்கால பாதுகாப்பிற்காக வர்த்தகர் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.