ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்களுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று (17) ராஜகிரியவில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் வழமையை விட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள் என நம்புவதாகத் தெரிவித்த ரத்நாயக்க, அனைத்து மக்களையும் அதிகாலையிலேயே வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றார்.
ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது தேர்தல் வன்முறைகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதரவாளர்கள் பலர் தவறுகளைச் சுட்டிக்காட்டியதையடுத்து, அவர்கள் அவற்றைத் திருத்திக் கொண்டதாக அவர் கூறினார்.