யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கிருமி தொற்றினால் 16 நாள் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கடந்த 01ஆம் திகதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாய் குழந்தையை பிரசவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய வேளை, பால் குழந்தையின் வாயில் இருந்து வெளியே வந்துள்ளது.
அதனையடுத்து தாயும் குழந்தையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குழந்தை 16ஆம் திகதி உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் போது கிருமி தொற்றே உயிரிழப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.