பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்கள், இலங்கை நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் தங்கள் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மத்திய, கிழக்கு, வடமத்திய, வடக்கு, வடமேற்கு, சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில், தேர்தலுக்கு முந்திய ஏற்பாடுகளை, பொதுநலவாய குழு கண்காணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும் வரை செயல்முறையை, தமது குழுக்கள் கண்காணிக்கும்.
அதேநேரம் வழக்கம் போல், தமது குழுவினர் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளையும் கவனிப்பார்கள் என்றும் பொதுநலவாய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, பொதுநலவாய கண்காணிப்பாளர் குழுவின் தலைவர் THE Danny Faure, கொழும்பில் இருந்து இந்த செயல்முறையை வழி நடத்துகிறார்.