2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் பதுளை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
அநுர குமார திஸாநாயக்க 23,629 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 7,967 வாக்குகளையும்,
சஜித் பிரேமதாச 7,757 வாக்குகளையும்,
நாமல் ராஜபக்ஷ 598 வாக்குகளையும்,
திலித் ஜயவீர 151 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.