சஜித் பிரேமதாசவுக்காக நாங்கள் கடுமையாக பிரச்சாரம் செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர திஸாநாயக்க பதவியேற்பார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
ஜனநாயகம் மற்றும் நல்லெண்ணத்தின் உணர்வில் நான் எனது நண்பருக்கு கடினமான பாதையில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (22) வெளியான நிலையில் அவர் தனது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்தும் தனது நிலைப்பாட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கின்றார். ‘ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின பிரச்சாரப் பாதையில் எனது அணியுடன் அயராது உழைத்தேன்.
எங்களின் முயற்சிகள் எமக்கு வலுவான இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. அனுரகுமார திஸாநாயக்க நாடு முழுவதிலும் உள்ள வாக்காளர்கள் மற்றும் முக்கிய மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
அரசியல் கருத்துக்களில் நாம் வேறுபட்டாலும், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர திஸாநாயக்கவின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சவாலான காலங்களில் அவர் தேசத்தை வழிநடத்திச் செல்லும் வகையில் ஆக்கப்பூர்வமான பதவிக்காலம் அவருக்கு அமைய வாழ்த்துகள்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.